Monday 5 December 2011

கன்னி : 2012 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்




உத்திரம் - 2  , 3 , 4 ஆம் பாதம், ஹஸ்தம், சித்திரை - 1 , 2  ஆம் பாதம் நட்சத்திரங்களில் பிறந்த கன்னி ராசி நேயர்களுக்கு : 

ஜனவரி

ஜவ்வுபோல் இழுத்துக் கொண்டிருந்த வேலைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு விஷயங்களுக்காக சண்டை போடுவதை விட்டுவிட்டுஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நலம் தரும். உடல் நலனில் அக்கறைகாட்டுவது நலம். தாயின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். பிள்ளைகளுக்காகவீண் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும். தெய்வ வழிபாடுகளில் கலந்துகொள்ளபுனித யாத்திரை செல்லும் வாய்ப்புகள் உருவாகும்.

பிப்ரவரி

மனதில் தெளிவும் நிம்மதியும் ஏற்படும். முடியாத காரியங் களையும் முனைந்துசெயல்பட்டு முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏறப்படும். பொதுவாழ்வில் புகழும் பெருமையும் ஏற்படும். சோர்வு விலகி புத்துணர்ச்சிபெறுவீர்கள். தாய் வழி உறவுகளினால் சில நல்ல சம்பவங்கள் நிகழும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்கு தாரர்களுடன் அனுசரித்துப் போனால் பிரச்சினைகளைத்தவிர்க் கலாம். தேங்கிக் கிடந்த பணிகள் விரைவில் முடிவுக்கு வரும். பொருளாதாரப் பற்றாக்குறை நீங்கும். வெளியூர் பயணம் மூலம் நன்மை ஏற்படும்.

மார்ச்

தொழில் மேன்மை உண்டாகும். புதிய தொழில் உண்டாகும். அடிமை வேலையை விட்டுசுய தொழில் ஆரம்பித்துச் செயல்படலாம். என்றாலும் போட்டி, பொறாமை,வைத்தியச் செலவுகள், வழக்கு விவகாரங்கள் உங்களை டென்ஷன் பண்ணலாம். ஆனாலும்இவற்றை எல்லாம் சமாளித்துக் கொணடு செயல்படுவீர்கள். கௌரவப் பிரச்சி னையும்கௌரவப் போராட்டமும் ஏற்படலாம். வாய்வுத் தொல்லை, நரம்புத் தளர்ச்சி,அஜீரணம் சம்பந்தமான தொந்தரவுகளும் அகால போஜனமும் உங்களை பாதிக்கலாம்.

ஏப்ரல்

தெளிவான நிலை பிறக்கும். சாதிக்க வேண்டும் என்று எண்ணி, தீவிரமாகச்செயலில் இறங்கி அதில் வெற்றியும் பாராட்டும் பெற வாய்ப்புகள் உருவாகும்.வலிய வந்த உறவினர்களிடம் கவனமுடன் செயல்படவும். சில குடும்பங்களில்மக்களின் திருமணம் நடைபெறும் யோகம் உண்டாகும். பெற்றோர்களின்ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேற்று மொழி, மதத்தவர்களால் திடீர்திருப்பங்கள் ஏற்படும். பிரபலங்களின் உதவியால் சில சிக்கலான பிரச்சினைகள்சுமூகமாகத் தீர்க்கப்படும்.

மே

உடல் நலம் சீராகும். பணப்புழக்கம் சற்று சரளமாகக் காணப் படும். கணவன்-மனைவியிடையே இருந்த ஊடல் விலகி மகிழ்ச்சி பெருகும். சிலருக்கு வீடு, வாகனயோகம் ஏற்படும். குழந்தைகள் வகை யில் தேவையற்ற அலைச்சலும் செலவும்ஏற்படும். சொத்து வாங்கும் யோகம் அமையும். அப்போது வில்லங்கம் எதுவும்இருக்கிறதா என்று சரிபார்த்து வாங்கவும். உங்களைப் பற்றி வீண் புகார்களைப்பரப்பி விடுவார்கள். கவனமுடன் செயல்பட்டால் அவற்றை முறியடிக்கலாம்.பெண்கள் கோபத்தை விட்டு பெற்றோர் சொல்படி கேட்டு நடந்து கொள்ளவும்.

ஜூன்

தொழில் மேன்மை, வியாபார விருத்தி, கிளை ஸ்தாபனம் அமைத்தல், புதிய தொழில்ஆரம்பித்தல் போன்ற நன்மைகளை அடை வதுடன் கொள்முதல் பண்ணிய இனங்களில்கணிசமான லாபமும் கிடைக்கும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்பட்டாலும் அதுசிறப்பான தாக இருக்கும். சிலருக்கு விரும்பத் தகாத நிகழ்ச்சிகள்நடந்தாலும் நேர்வழிப் பயணத்தின்போது நல்ல மாற்றங்களாக மாறிவிடும். மேலதிகாரிகளின் கோபத்தை உத்தியோகத்திலிருப்பவர்கள் சிலர் சந்தித் தாலும், கோபம்இருக்குமிடத்தில் குணமும் இருக்கும் என்பதைக் கருதி ஆறுதல் அடையலாம்.

ஜூலை

கொடுக்கப்பட்ட வேலைகளைக் கச்சிதமாக நிறைவேற்றி மேலிடத்தாரைத்திருப்திப்படுத்தலாம். பாராட்டும் பரிசும் பெறலாம். அது உங்களோடு சேர்ந்தசிலருக்குப் பொறாமையாகவும் அமையலாம். மாணவர்களுக்கு மந்தத் தன்மையும்மறதித் தன்மையும் மாறி உற்சாக மும் ஆர்வமும் உண்டாகும். முயற்சி எடுத்துப்படித்தால் வரும் தேர்வு களில் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். உழைப்புநிச்சயம் பலன் தரும். பெண்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். இருந்தாலும்சலிப்பு அடையாமல் கடமைகளைச் செய்து முடிப்பீர்கள்.

ஆகஸ்ட்

முயற்சிகளில் வெற்றியும் காரியங்களில் அனுகூலமும் கடமை களில் நிறைவும்ஏற்படும். உடல் நலத்தில் முன்னேற்றமும் ஆரோக்கி யத்தில் விருத்தியும்ஏற்படும். சிலருக்கு வெளியூரில் குடியேறும் சூழல் உண்டாகும். யார்உதவியையும் எதிர்பாராமல் உங்கள் சொந்த முயற்சி யிலேயே வீடு, வாசல், வாகனவசதி சௌக்கியங்களை அடைவதோடு பிள்ளைகளின் ஆதரவும் பக்கபலமாக அமையும்.உங்கள் வாழ்க்கை யில் நல்ல மாற்றமும் திருப்பமும் அமையும் எனஎதிர்பார்க்கலாம்.

செப்டம்பர்

ஒரு வேலையைச் செய்து முடிப்பதற்குள் வேறு பல வேலைகள் விரட்டிக் கொண்டுவரும். "டென்ஷன்' ஆகாமல் எதற்கு முதலிடமும் முக்கியத்துவமும் கொடுக்கவேண்டும் என்று சிந்தித்துச் செயல் பட்டால் சிறப்பாக அமையும்.குடும்பத்தில் எல்லாரிடமும் பாராட்டு பெறலாம். கூடப் பிறந்தவர்களின் சொந்தபந்தமெல்லாம் "கிட்டப் போனால் முட்டப்பகை; தூரத்துப் பச்சை கண்ணுக்குகுளுமை' என்ற அளவில் இருக்கும். ஆடை, ஆபரணம், அணிமணி சேர்க்கைகளுக்குப்பஞ்சம் இருக்காது. உங்களுக்காக- உங்களின் முக்கிய தேவைகளுக்காக எதுவும்வாங்கலாம்.

அக்டோபர்

கொடுக்கல்- வாங்கல் சீரான நிலையில் இருக்கும். தொட்ட தெல்லாம் விரயம் என்றநிலை மாறி, எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமும் லாபமும் எதிர்பார்க்கலாம்.உழைப்பு கடுமையாக இருக்கும். ஊதியம் சுமாராக இருக்கும். போட்டி, பொறாமைகளைமுறியடித்து ஆதாயம் அடையலாம். முற்பகுதியில் நிதானமான பலனையும் பிறகுவேகமும் விறுவிறுப்புமான பலன்களையும் எதிர்பார்க்கலாம். தொழிலாளர் களுக்குஉழைப்பு கடுமையாக இருக்கும். வேலை இல்லாத காலத்தில் ஜாலியாகவும், வேலைஇருக்கும் சமயம் சோம்பேறித்தனமாகவும் இருக்கும். கவனம் தேவை.

நவம்பர்

இந்த மாதம் ஆயிரம் எண்ணங்களும் திட்டங்களும் மனதில் உருவாகும். ஆனால்ஒன்றுகூட நிறைவேறாது. "ஒன்று நினைக்கில் அது ஒழிந்து மற்றொன்றாகும்; அன்றிஅதுவரினும் வந்தெய்தும்; ஒன்று நினையாமல் முன் வந்து நிற்கும்; எனையாளும்ஈசன் செயல்' என்னும் ஒரு பழம் பாடல் உண்டு. அப்படியேதான் உங்கள்அனுபவத்தில் நடக்கிறது. விரும்பினால் விலகிப் போகும்; விலகிப் போனால்விரும்பி வரும். இந்த உண்மையின் ரகசியத்தை உணர்ந்து செயல்பட்டால்துன்பமும் இல்லை; துயரமும் இல்லை. உறவினர், சொந்த பந்தம் வகையில், வளர்த்தகடா மார்பில் பாயும் அனுபவத்தை சந்திப்பீர்கள். விசுவாசமில்லாதவர்களின்செயல்கள் வேதனையளிக்கும்.

டிசம்பர்

இந்த மாதம் உங்கள் தகுதி, திறமை, ஆற்றல், கௌரவம் எதற்கும் பங்கம் வராது."கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மை தரும்'.உங்கள் கௌரவம் காப்பாற்றப்படும். மனதில் மட்டும் காரணமற்ற ஒருவித ஏக்கமும்விரக்தியும் நிலவும். அதை மாற்றிக்கொள்ளவும். கடின முயற்சிக்குப் பிறகேஒவ்வொரு சிறு செயலையும் பூர்த்தி செய்தாக வேண்டும். அதனால் காலதாமதம்ஏற்படும். வீண் விரயம், அலைச்சல் இவற்றைச் சந்தித்தாக வேண்டும். அதற்காகவிரக்தி அடையாமல் விடாமுயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.



No comments:

Post a Comment