Tuesday 6 December 2011

கும்பம் : 2012 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்




அவிட்டம்  - 3 ,4 , சதயம், பூரட்டாதி - 1 ,2 ,3  பாதங்களில் பிறந்த கும்ப ராசி நேயர்களே :

ஜனவரி

குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பூமி, வீடு, வாகனம்,நிலம் போன்றவற்றில் சுபச்செலவுகள் ஏற்படும். வியாபாரம், தொழில்துறைகள்திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும்,அதிகாரிகளின் ஆதரவும் அனுசரிப்பும் எதிர்பார்க்கலாம். கடன்கள்கட்டுக்கடங்கி இருக்கும். சகோதர வழி உறவுகளில் சுமுகநிலை இருக்காது.ஒட்டுதலும் இல்லை, பற்றுதலும் இல்லை. அன்னிய நண்பர்களின் உதவியும்ஒத்தாசையும் கிடைக்கும். அன்னிய இனத்து நண்பரின் உதவி பயனுள்ளதாக அமையும்.

பிப்ரவரி

வாழ்க்கை வசதிகள், தொழில் இயக்கம், வேலைத்தன்மை ஆகியவற்றுக்கு கேடுகெடுதியில்லை. ஆனால் உங்களிடம் உதவி பெற்றவர்களே உங்களுக்கு விரோதியாகமாறி நஷ்டத்தையும் விரயத்தையும் உண்டாக்கும் சூழ்நிலை அமையும். உங்களுடையதன்மானம், சுயமரியாதை, கவுரவம் காரணமாக எதிரியின் லெவலுக்கு கீழே இறங்கமுடியாமல் கஷ்டங்களை அனுபவித்து வேதனைப்படுவீர்கள். வெளியில் நிற்கும்பெரும்தொகை உங்களின் அவசரத் தேவைக்குப் பயன்படாமல் கைக்குக் கிடைக்காமல்தாமதப்படலாம். அதைச் சமாளிக்க நீங்கள் வெளியில் கடன் வாங்கலாம்.

மார்ச்

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பார்கள். பிரச்சினைகளுக்குமேல்பிரச்சினைகள் கடல்அலை அடுத்தடுத்து வருவதுபோல உங்களை வந்து தாக்குகிறது.அலை எப்போது ஓய்வது, பயந்தவன் எப்போது கடலில் இறங்கிக் குளிப்பது என்றகதையாக, பிரச்சினைகளின் தீர்வுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களிடம் இருந்து விலகிப்போன உடன்பிறப்புகள் கஷ்டங்களை அனுபவித்து உங்கள்ஆதரவு கேட்டு அடைக்கலமாக வரலாம். அதை ஏற்றுக் கொண்டால் உங்களால்அவர்களுக்கு ஆதரவும் அனுகூலமும் கிடைக்கும். ஆனால் அவர்களால் உங்களுக்குவேதனையும் விரயமும்தான் மிச்சம்.

ஏப்ரல்

அடிப்படை வாழ்க்கை வசதிகளுக்கும் சௌகர்யங்களுக்கும் குறைவில்லை. ஆனால்எவ்வளவு பணம் வந்தாலும் தங்குவதில்லை. விரயம் ஆகிறது. கடின முயற்சிகள்காணப்பட்டாலும் முக்கியமான காரியங்கள் வெற்றிபெறும். அலைச்சலும்திரிச்சலும் ஏற்பட்டு பிறகே வெற்றி வாய்ப்பு ஏற்படும். வியாபாரம், தொழில்துறையில் போட்டி, பொறாமைகளைப் போராடிச் சமாளித்துவிடலாம். தசாபுக்தியைஅனுசரித்து சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். பலநாள் தடைப்பட்டுவந்த தெய்வ வழிபாட்டுப் பிரார்த்தனை நிறைவேறும்.

மே

தவளை தன் வாயால் கெட்டதுபோல் உங்கள் பேச்சினாலேயே சங்கடங்களை ஏற்படுத்திக்கொள்வீர்கள். "வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினைஅறுப்பான்', "முற்பகலில் செய்தது பிற்பகலில் விளைகிறது'. தேள்போல்கொட்டும் பேச்சுகளைப் பேசாமல் கவனமாகப் பேசவேண்டும். அலைச்சலும் விரயமும்அதிகம் இருந்தாலும் அதிலும் ஒரு ஆனந்தம் காண்பீர்கள். யாரையும்சந்திக்காமல் ஓய்வாக வீட்டில் இருந்தால் "ரெஸ்ட்' எடுக்க மனம் வராது;போரடிக்கும். ஆதாயம் இருக்கிறதோ இல்லையோ... கவலைப்பட மாட்டீர்கள்.

ஜூன்

அலைச்சலும் திரிச்சலும் சில நேரங்களில், திட்டங்களில் தடையும் தாமதமும்ஏற்படுத்தும். வெற்றி- தோல்வியைப் பற்றிக் கவலைப்படாத மனம் படைத்தவர்கள்என்றாலும் நண்பர்களும் வேண்டியவர்களும் உங்கள் மனதை நோகடிப்பதைத்தாங்கிக்கொள்ள முடிய வில்லை. உங்களுக்கு எந்தப் பிரதிபலனும் இல்லாமல்அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய், அவர்கள் முறையாகக் கடைப்பிடிக்காமல்நடந்து கொள்வதால் உங்களுக்கு அவப்பெயரும் கைநட்டமும் ஏற்படும். அதைஜீரணிக்க முடியாது. மனைவி மக்களின் அனுசரிப்பும் ஆதரவும் உங்களைவிரக்தியடையாமல் தெம்பூட்டும்.

ஜூலை

மாத முற்பகுதியில் சில காரியங்களில் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாகமுடியும். எந்தச் செயலிலும் ஆர்வம், அக்கறை, சுறுசுறுப்பில்லாதபடி"டல்லாக' இருக்கும். காசு பணத்திற்கு தட்டுப்பாடு இல்லையென்றாலும் அதிகச்செலவுகள் கட்டுப்படுத்த முடியாதபடி இருக்கும். அதனால் குடும்பத்திலும்வாக்கு வாதங்களும் தர்க்கங்களும் உருவாக இடம் உண்டு. பிற்பகுதியில்தொல்லைகள் தீரும். துன்பங்கள் மாறும். சேமிப்பு சேரும். கடன் உபத்திரவம்படிப்படியாகக் குறையும். மன ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கருத்துவேறுபாடுகள் விலகி அனுசரித்து நடக்கும் தன்மை மலரும்.

ஆகஸ்ட்

பொதுப்பணிகள், சமுதாயத் தொண்டு, அரசியல் கட்சி ஈடுபாடுஉள்ளவர்களுக்கெல்லாம் இக்காலம் முன்னேற்றமான காலம். தசாபுக்தி யோகமாகஇருந்தால் பஞ்சாயத்து, நகராட்சி தேர்தலில் ஈடுபட்டு வெற்றியை அடையவாய்ப்புண்டு. போட்டி, பொறாமைக்கு மத்தியில் எதிர்நீச்சல் அடித்து, காசுபணம் செலவழித்து வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டும். சமயசந்தர்ப்பவாதிகளாலும் சுயநலப் பேர்வழிகளாலும் தொல்லைகளும்வாக்குவாதங்களும் ஏற்படலாம். கவனம்... வியாபாரம், தொழில்துறைசெயல்பட்டாலும் போதிய லாபமில்லை; திருப்தியில்லை.

செப்டம்பர்

பெருமையும் செல்வாக்கும் பிரமுகர்களின் தொடர்பும் ஒரு பக்கம் இருந்தாலும்,பொருளாதாரத்தில் இன்னும் தன்னிறைவு பெற முடியவில்லை. வீட்டுத்தேவைகளுக்கும் அன்றாட வசதிகளுக்கும் ஒவ்வொருவரையும் எதிர்பார்த்துதான்காரியத்தை நிறைவேற்ற வேண்டிய நிலை. வெளிப்படையாகச் சொன்னால் கவுரவப்பிச்சை எடுப்பதுபோல... மிக நெருக்கமாகப் பழகியவர்களிடம் தேவையற்ற கருத்துவேறுபாடுகளும் மனத்தாங்கல்களும் ஏற்படலாம். தேர்தல் நேரத்தில்அரசியல்வாதிகள் கூட்டணிக் கட்சிகள் அடிக்கடி மாறுவதுபோல் நீங்களும்நண்பர்களை மாற்றிக்கொள்ளும் சூழ்நிலை.

அக்டோபர்

மனைவி வழியிலும் அல்லது பிள்ளைகள் வகையிலும் மனத்திருப்தியற்ற நிலை.கவுரவப் பிரச்சினைகள். ஒவ்வொருவருக்கும் "ஈகோ' பிரச்சினை இருக்கும்.குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.' "நீரடித்து நீர் விலகாது' என்பதைநினைவில் கொண்டு செயல்படுங்கள். மனதில் ஒருவித குழப்பத்தையும் தோல்விபயத்தையும் சுமந்து கொண்டு இருப்பீர்கள். இருந்தாலும் கூடவே ஒரு அசட்டுத்துணிச்சலும் இருக்கத்தான் செய்யும். தொழில், பதவி, வாழ்க்கை, கவுரவம்எல்லாவற்றிலும் எதிரிகளின் சதி குறுக்கிட்டாலும், எதற்கும் அஞ்சாதநெஞ்சுறுதியோடு சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போன்ற ஒரு துணிச்சல்தென்படும்.

நவம்பர்

வியாபாரம், தொழில்துறை, உத்தியோகத்தில் எதிர்பாராத பின்னடைவுகளோ மந்தகதியோஅல்லது போட்டி பொறாமை களினால் மன அமைதிக் குறைவோ காணப்படலாம். பிள்ளைகள்வகையில் தொல்லைகளையும் துயரங்களையும் சந்திக்க வேண்டிய நேரம். பிள்ளைகளால்எதிர்பாராத வைத்தியச் செலவும் ஏற்படலாம். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும்தலைக்கு வந்தது தலைப்பாகை யோடு போன மாதிரி சூரியனைக் கண்ட பனிபோலவிலகிவிடும். பிற்பகுதியில் தொழில், வேலை, உத்தியோகத்திற்குப் பாதிப்புஇல்லை. ஆனால் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது.

டிசம்பர்

வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும், இரவும் பகலும்போல எல்லாருடையவாழ்க்கையிலும் மாறி மாறித்தான் வரும். கஷ்ட நஷ்டம் இல்லாதவர்களே இல்லை.வெறும் இனிப்பாகவே சாப்பிட்டாலும் திகட்டிவிடும். அதற்காக காரமாகச்சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்ளாது. இனிப்பும் காரமும் சேர்ந்து வந்தால்தான்"டேஸ்ட்'. எனவே சோதனைகளைக் கண்டு சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாகச்செயல்படுங்கள்; வெற்றி உங்கள் பக்கம். விரோதிகளைக் கண்டு மிரண்டுவிடாமல்நம்பிக்கையோடும், துணிவோடும் எதிர்த்து நின்று போராடுங்கள். எதிரிகள்உதிரிகளாகிவிடுவார்கள்.


No comments:

Post a Comment