Tuesday 6 December 2011

மகரம் : 2012 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்





உத்திராடம்  - 2,3,4 , திருவோணம் , அவிட்டம்  1- 2 - நட்சத்திர பாதங்களில் பிறந்த மகர ராசி நேயர்களே :

ஜனவரி

இம்மாதம் மன மகிழ்ச்சியை மட்டுமே அளிக்கக்கூடிய மாதமாக அமையும். காரியசித்திகள் என்பது சற்று தாமதமாகத்தான் நிகழும். கொடுக்கல்- வாங்கலில்கொடுக்க வேண்டிய கடனைக் கொடுத்து திரும்பவும் கடன் வாங்குவீர்கள். மாதப்பிற்பகுதியில் இந்த நிலை சற்று மாறும். போட்டி, பந்தயங்களில்கலந்துகொள்வதைத் தவிர்ப்பது நல்லது. கூடுமானவரையில் புதிய முயற்சிகளில்ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில்குழப்பமான சூழ்நிலை உருவாகும். இன்னும் சிறிது நாட்களுக்குக் கவனமாகத்தான்இருக்க வேண்டும்.

பிப்ரவரி

தொழில் தொடர்பாகத் தடைபட்ட பயணங்கள் நல்ல முறையில் தொடங்கி ஆதாயமும்கிடைக்கும். இரும்பு வியாபாரிகள், இயந்திரப் பொறியாளர்கள் ஆகியோருக்குமுன்னேற்றகரமான மற்றும் லாபகரமான சூழ்நிலை உருவாகும். குழந்தைகளின்உடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை என்பது சுமாராகத்தான்இருக்கும். காலப்போக்கில் அது மாறிவிடும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள்ஏற்படும். அதற்காகக் கடன்பட வேண்டிய அவசியமும் ஏற்படும். அலுவலர்களுக்குஉத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகலாம்.

மார்ச்

அநாவசியப் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். தொந்தரவுகள் காத்துநிற்கின்றது. பணப் புழக்கம் பரவாயில்லை. கொடுக்கல்- வாங்கலில் சற்றுதேக்கமான சூழ்நிலை உருவாகும். யாருக்கும் ஜாமீன் பொறுப்பு ஏற்க வேண்டாம்.உடல்நலம் நன்றாக இருக்கும். தொழில் தொடர்பாகப் பயணங்களை மேற்கொள்ளலாம்.ஆதாயம் ஏற்படும். மனைவி வகையில் வரும் தன வரவால் ஓரளவு உங்களது பணக்கஷ்டம் தீரும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பெரிய பாதிப்புகள்இல்லை. சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும். சிறு விபத்துகளும் ஏற்படலாம்;கவனம் தேவை. ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரம்தேடிக்கொள்ளவும்.

ஏப்ரல்

பண வரவு நல்ல முறையில் அமையும். உத்தியோகத்தில் நல்ல பெயரைப் பெறுவீர்கள்.தங்களுக்கு ஒதுக்கிய பணிகளைச் செவ்வனே செய்து பாராட்டும் நன்மதிப்பும்பெறலாம். மனைவி வகை உறவினர் ஒருவரால் அலைச்சலும் மனக்கஷ்டமும் ஏற்படும்.சிலருக்கு தகப்பனாரின் வேலை தொடர்பாக வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும்.தந்தையின் உடல்நிலையில் படிப்படியாக தேர்ச்சி காணலாம். வீடு, வாசல்போன்றவை திருப்திகரமான சூழ்நிலையில் இருக்கும். புதிய தொழில் முயற்சிகளைஒத்திப்போடுவது நல்லது. தந்தையின் தொழிலையே நடத்திக் கொண்டு வரலாம்.

மே

அந்நியர்களின் உதவி பெரிதும் பாராட்டுக்குரியதாக அமையும். நீங்கள்எண்ணியவற்றை சிரமம் இல்லாமல் முடித்துவிட முடியும். லாபகரமான மாதமாகஅமையும். பணவரவும் நல்ல முறையில் இருக்கும். கொடுக்கல்- வாங்கலில்திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். குழந்தைகளின் உடல்நிலையில் முன்னேற்றம்காணப்படும். அவர்களின் கல்வியில் மந்தப் போக்கான தன்மை தெரிகிறது.விளையாட்டுத்தனமும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியிலும்தான் அவர்களின் கவனம்செல்கிறது. அடுத்த வகுப்பு போகும் வரை இந்த நிலை நீடிக்கும்.வியாபாரிகளுக்கு மிகுந்த திருப்தியைக் கொடுக்கும்; லாபகரமான சூழ்நிலைஉருவாகும்.

ஜூன்

கூடுமானவரை உங்கள் பார்ட்னரிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அவர்களால்உங்களுக்கு நஷ்டம் இல்லாவிட்டாலும் சில அநாவசியத் தொல்லைகள் உண்டாகலாம்.அலைச்சலும் மன அமைதியின்மையும் காணப்படுகிறது. பண வரவு ஓரளவு சுமாராகஇருக்கும். அடிக்கடி தாயின் உடல்நிலையில் குறைவு ஏற்படும். வைத்தியச்செலவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கடன் தொல்லைகள் பாதிக்காதுஎன்றாலும் கடன் சுமை அதிகமாகக் காணப்படும். தொழிலில் இட மாற்றம் ஏற்படவாய்ப்புண்டு.

ஜூலை

தொழிலில் இடமாற்றம் தவிர்க்க முடியாததாக அமைகிறது. போட்டி, பந்தயங்கள்நன்றாக இருக்கும். குழந்தைகளின் உடல்நலம் நன்றாக இருக்கிறது. அவர்களதுகல்வியில் சற்று கவனம் தேவை. சிறு விபத்துகள் ஏற்படலாம். என்றாலும் பெரியபாதிப்பு ஏதும் வராது. கடிதங்களில் எதிர்பார்த்த இனங்கள் அனுகூலமாகும்.தாயார் வழியில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூல் ஆகும். சில காரியங்கள்கடைசி நேர தீவிர முயற்சியால் அனுகூலம் பெறும். முஸ்லிம் நண்பர் ஒருவரின்உதவியும் ஆதரவும் கிடைக்கும்.

ஆகஸ்ட்

உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். பொருளாதாரப்பற்றாக்குறை இல்லை. உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகள்நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் நாணயத்தின் பேரில் நடைபெறும்.உறவினர்களின் நன்மைக்காக சிறு பயணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.நண்பர்களால் ஆதாயமும் ஆதரவும் உண்டு. புதிய நண்பர்களின் அறிமுகம்ஏற்படும். தந்தையின் முயற்சிகளில் சில தோல்வியுறுவது சிறிது மனக் கஷ்டத்தைஏற்படுத்தினாலும் அது நிரந்தரமல்ல.

செப்டம்பர்

உங்களது ஸ்திரச் சொத்துக்களில் ஒரு பகுதியை விற்க முயற்சி செய்வீர்கள்.அந்த முயற்சி கைகூடும். இளைய சகோதரர் ஒருவரால் வரும் சச்சரவுகளுக்குநீங்கள் பொறுப்பேற்க நேரும். தந்தையின் உடல்நிலையை சற்று ஜாக்கிரதையாகப்பார்த்துக் கொள்ளவும். பார்ட்னர்களின் மூலம் தொந்தரவுகள் ஏற்படும்.விரும்பியோ, விரும்பாமலோ தூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். வீடு, நிலம்,வண்டி வாகனம் இவற்றால் லாபம் எதுவுமில்லை. பழைய கடன் தொல்லை சற்றுபாதிக்கும். கூட்டு வியாபாரிகளுக்கு வியாபாரம் சுமாராக இருக்கும்.

அக்டோபர்

எதிர்பாராத வகையில் தொழிலில் இடமாற்றம் ஏற்படும். அது தவிர்க்க முடியாதது.பெயரும் புகழும் ஓங்கும். சில விவகாரங்களை கௌரவப் பிரச்சினையாகஏற்றுக்கொண்டு, அதற்காக ஏற்படும் சிரமத்தையும், அலைச்சலையும் பொருட்படுத்தமாட்டீர்கள். போட்டி, பந்தயங்கள் நன்றாக உள்ளது. வழக்கு விவகாரங்கள்எதிர்பாராத விதத்தில் வெற்றி பெறும். மாதப் பிற்பகுதியில் பணவரவுகுறிப்பிடத் தக்கதாக இருக்கும். கூட்டு வியாபாரிகள் தங்களதுபாகஸ்தர்களிடம் பண விவகாரங்களில் சற்று முன்ஜாக்கிரதையாக இருக்கவும்.

நவம்பர்

உங்கள் உடல்நலனில் முன்னேற்றம் தெரியும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்என்றாலும், அதற்கேற்ற செலவுகள் அணிவகுத்து நிற்பதுபோல் நிற்கும். மூத்தசகோதரர் ஒருவரால் தங்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.தகப்பனாரின் உடல்நலத்தை சற்று ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ளவும்.வயிற்றுப்போக்கு, ஜுரம் முதலியவற்றால் அவதிப்படக்கூடும். மனைவியின் உடல்நலனிலும் அக்கறை காட்ட வேண்டும். வீட்டுக் கவலையால் வேலைக்குச் சரிவரசெல்ல முடியாமல் தடைகள் இருந்து வரும். இந்நிலை மாதப் பிற்பகுதியில்மாறும்.

டிசம்பர்

நண்பர்களால் செலவினங்களும் மனக்கிலேசமும் தெரிகிறது. பணவரவு சுமாராகஇருக்கும். பழைய கடன்கள் சற்று தொல்லைகள் தந்து வந்தாலும் ஒவ்வொன்றாகத்தீர்க்கப்படும். செய்து வரும் முயற்சிகள் தாமதப்பட்டு நிறைவேறும். வீடு,நிலம் போன்றவற்றில் திருப்திகரமான நிலை காணப்படும். உத்தியோகத்தில்மாறுதல்களும் முன்னேற்றமும் தெரிகிறது. அநாவசிய அலைச்சலும், புதிய முயற்சிகளின் பொருட்டு வெளி இடங்களில் தங்குவதும் சற்று லாபத்தைத் தரலாம். நீண்டநாட்களாக நிறைவேற்றாமல் இருந்த தெய்வப் பிரார்த்தனை ஒன்று நிறைவேறும்.அதற்கான முயற்சிகளும் கைகூடும்.



No comments:

Post a Comment