வணக்கம் தோழர்களே, உலகத்தின் ஆன்மா இந்தியா என்பார்கள். எனில், ஆன்மிகத்தின் இதயமாய் தமிழகம் இருந்து வருகிறது.
இந்துமதம் மிகத் தொன்மையானது. அதன் பெரும்பிரிவான சைவம் பல அடியார்களால் வளர்க்கப்பட்டு மேன்மையுற்றது. சிவ வழிபாடு என்பது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது.
கி. பி.- ஏழாம் நூற்றாண்டை சைவ சமயத்தின் பொற்காலம் எனலாம்.இந்த நூற்றாண்டில்தான் அப்பரும், ஞான சம்பந்தரும் தோன்றி நலிவுற்ற சைவத்தை நிலைபெற்று ஓங்கச் செய்தனர். இவர்கள் காலத்தில், சைவமும் பக்தியும் சிறக்க வாழ்ந்தோரையே நாம் நாயன்மார்கள் என்கிறோம்.
நாயன்மார்கள் தொண்டினைப் போலவே, வாழ்க்கை முறையிலும் தனிப்பட்ட சிறப்பினைக் கொண்டவர்கள். நாயன்மார்கள் எத்தகைய துன்பங்கள் வந்த போதும் தனது சிவத்தொண்டிலும், பக்தியிலும் எத்தகைய மாறுபாடும் காட்டாது, பக்தியே பரமானந்தம் என்று, ஒரே நிலையில் உறுதிபட இருந்தார்கள். அவர்கள் பொதுத் தொண்டில் ஈடுபாடு கொண்டிருந்த காலங்களில், அவர்களோடு, அவர்தம் மனைவிமார்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாயன்மார்களின் வரலாறான பெரிய புராணம் சைவத்தின் முக்கிய ஆவணம். தமிழின் இலக்கிய மேம்பாட்டுக்கு கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம். சேக்கிழார் தமது 4281 பாடல்களில் விரித்துரைத்த திருத்தொண்டர் பராணத்தை (பெரிய புராணம்) ஆதாரமாய் கொண்டு, அடியேன் அந்த அறுபது மூவர் வரலாறையும் இந்து இணைய பக்கத்தில் வெளியிடவிருக்கிறேன். ஆன்றோரும் சான்றோரும் கற்றோரும் இறையருள் பெற்றோரும் துணை நிற்குமாறும், என்னுள் இருந்து தன்னைச் செலுத்தும் இறைவன் பாதம் பணிந்து படைக்கிறேன்.... நன்றி.......
எண் | பெயர் | குலம் | இடம் | |
|---|---|---|---|---|
| 1 | அதிபத்தர் | பரதவர் | நாகப்பட்டினம் | |
| 2 | அப்பூதியடிகள் | அந்தணர் | திங்களூர் | |
| 3 | அமர்நீதி நாயனார் | வணிகர் | பழையாறை | |
| 4 | அரிவட்டாயர் | வேளாளர் | புள்ளமங்கலம் | |
| 5 | ஆனாய நாயனார் | இடையர் | திருமங்கலம் | |
| 6 | இசைஞானியார் | ஆதி சைவர் | திருவாரூர் | |
| 7 | இடங்கழி நாயனார் | செங்குந்தர் குல குறுநில மன்னர் | புதுக்கோட்டை | |
| 8 | இயற்பகை நாயனார் | வணிகர் | காவிரிப்பூம்பட்டினம் | |
| 9 | இளையான்குடிமாறார் | வேளாளர் | இளையான்குடி | |
| 10 | உருத்திர பசுபதி நாயனார் | அந்தணர் | திறுத்தளையூர் | |
| 11 | எறிபத்த நாயனார் | செங்குந்தர் | கரூர் | |
| 12 | ஏயர்கோன் கலிகாமர் | வேளாளர் | பெருமங்கலம் | |
| 13 | ஏனாதி நாதர் | சான்றார் | ஏனா நல்லூர் | |
| 14 | ஐயடிகள் காடவர்கோன் | குறுநில மன்னர் | காஞ்சி | |
| 15 | கணநாதர் | அந்தணர் | சீர்காழி | |
| 16 | கணம்புல்லர் | செங்குந்தர் | சிதம்பரம் | |
| 17 | கண்ணப்பர் | வேடர் | காலஹஸ்தி | |
| 18 | கலிய நாயனார் | செக்கார் | திருவொற்றியூர் | |
| 19 | கழறிற்றறிவார் | அரசர் | கொடுங்கோளூர் | |
| 20 | கழற்சிங்கர் | குறுநில மன்னர் | காஞ்சி | |
| 21 | காரி நாயனார் | செங்குந்தர் | திருக்கடையூர் | |
| 22 | காரைக்கால் அம்மையார் | வணிகர் | காரைக்கால் | |
| 23 | குங்கிலியகலையனார் | அந்தணர் | திருக்கடையூர் | |
| 24 | குலச்சிறையார் | மரபறியார் | மணமேற்குடி | |
| 25 | கூற்றுவர் | செங்குந்தர் குல குறுநில மன்னர் | களப்பால் | |
| 26 | கலிக்கம்ப நாயனார் | வணிகர் | பெண்ணாடகம் | |
| 27 | கோச் செங்கட் சோழன் | அரசன் | திருவானைக்கா | |
| 28 | கோட்புலி நாயனார் | வேளாளர் | திருநாடியத்தான்குடி | |
| 29 | சடைய நாயனார் | ஆதி சைவர் | திருநாவலூர் | |
| 30 | சண்டேஸ்வர நாயனார் | அந்தணர் | செயஞலூர் | |
| 31 | சத்தி நாயனார் | வேளாளர் | இரிஞூர் | |
| 32 | சாக்கியர் | வேளாளர் | சங்கமங்கை | |
| 33 | சிறப்புலி நாயனார் | அந்தணர் | ஆக்கூர் | |
| 34 | சிறுதொண்டர் | சாலியர் | திருசெங்காட்டங்குடி | |
| 35 | சுந்தரமூர்த்தி நாயனார் | ஆதி சைவர் | திருநாவலூர் | |
| 36 | செருத்துணை நாயனார் | வேளாளர் | திருக்கண்ணபுரம் | |
| 37 | சோமசிமாறர் | அந்தணர் | அம்பரகத்தூர் | |
| 38 | தண்டியடிகள் | செங்குந்தர் | திருவாரூர் | |
| 39 | திருக்குறிப்புத் தொண்டர் | ஏகாலியர் | காஞ்சி | |
| 40 | திருஞானசம்பந்தமூர்த்தி | அந்தணர் | சீர்காழி | |
| 41 | திருநாவுக்கரசர் | வேளாளர் | திருவாமூர் | |
| 42 | திருநாளை போவார் | புலையர் | ஆதனூர் | |
| 43 | திருநீலகண்டர் | குயவர் | சிதம்பரம் | |
| 44 | திருநீலகண்ட யாழ்ப்பாணர் | பாணர் | ராசேந்திர பட்டினம் | |
| 45 | திருநீலநக்க நாயனார் | அந்தணர் | சியாதமங்கை | |
| 46 | திருமூலர் | இடையர் | திருவாவடுதுறை | |
| 47 | நமிநந்தியடிகள் | அந்தணர் | திருநெய்ப்பேறு | |
| 48 | நரசிங்க முனையர் | செங்குந்தர் குல குறுநில மன்னர் | சேந்தமங்கலம் | |
| 49 | நின்றசீர் நெடுமாறன் | அரசர் | மதுரை | |
| 50 | நேச நாயனார் | சாலியர் | மாயவரம் | |
| 51 | புகழ்சோழன் | அரசர் | உறையூர் | |
| 52 | புகழ்த்துணை நாயனார் | ஆதி சைவர் | அழகாபுத்தூர் | |
| 53 | பூசலார் | அந்தணர் | திருநின்றவூர் | |
| 54 | பெருமிழலைக் குறும்பர் | செங்குந்தர் | மிழலை | |
| 55 | மங்கையர்க்கரசியார் | அரசர் | மதுரை | |
| 56 | மானக்கஞ்சாற நாயனார் | வேளாளர் | ஆனதாண்டவபுரம் | |
| 57 | முருக நாயனார் | அந்தணர் | திருப்புகலூர் | |
| 58 | முனையடுவார் நாயனார் | வேளாளர் | திருநீடூர் | |
| 59 | மூர்க்க நாயனார் | வேளாளர் | திருவேற்காடு | |
| 60 | மூர்த்தி நாயனார் | வணிகர் | மதுரை | |
| 61 | மெய்ப்பொருள் நாயனார் | செங்குந்தர் குல குறுநில மன்னர் | திருக்கோவிலூர் | |
| 62 | வாயிலார் நாயனார் | வேளாளர் | மைலாப்பூர் | |
| 63 | விறன்மிண்ட நாயனார் | வேளாளர் | திருவாரூர் |

No comments:
Post a Comment